Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை எனக்கு இரண்டாவது தாய் வீடு: டோனி உருக்கம்

In கிாிக்கட்
Published: 10:49 GMT, Jul 23, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Anojkiyan
tn

சென்னை தனக்கு இரண்டாவது தாய் வீடு என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் ரி-ருவென்ரி லீக் தொடரின் ஆரம்ப விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இரு ஆண்டுக்கு முன்பு சேப்பாக்கத்தில் விளையாடினேன். மீண்டும் இங்கு துடுப்பாட்டம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை அணி 2 ஆண்டாக விளையாடவிட்டாலும் இரசிகர்களின் ஆதரவும், எண்ணிக்கையும் குறையவில்லை.

இந்திய அணிக்காக விளையாடும்போதும், சென்னை அணிக்காக விளையாடும் போதும் சென்னை இரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து இருக்கிறார்கள். இந்திய அணியின் நீலநிற சீருடை அணிவது என்பது விசேடமானது. அதேபோல சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற உடையும் விசேஷமானது. சென்னை எனக்கு 2வது தாய் வீடு ஆகும். சென்னையில் தான் எனது டெஸ்ட் அறிமுகம் நடந்தது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாகும். இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு நேரடியாக தகுதி பெற்று விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறது.

முதல் நோக்கம் மாநில அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும். அதில் சிறப்பாக செயல்பட்டு துலிப் கிண்ணம், தியோதர் கிண்ணம் போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பின்னர் இந்திய ஏ அணியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg