Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயினால் கரிபோ பிராந்தியத்தில் மட்டும் 41 வீடுகள் அழிவடைந்துள்ளது

In கனடா
Updated: 11:10 GMT, Jul 23, 2017 | Published: 11:10 GMT, Jul 23, 2017 |
0 Comments
1385
This post was written by : Anojkiyan

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயினால் பல்வேறு பாகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரிபோ பிராந்தியத்தில் மட்டும் 41 வீடுகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கரிபோ பிராந்திய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கரிபோ பிராந்திய நிர்வாகத் தலைவர் அல் றிச்மண்ட் கூறுகையில், ‘தமது பிராந்தியத்திலிருந்து 35,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு அல்லது வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் அங்கு குறைந்தது 41 வீடுகள் தீக்கிரையாகியுள்ளது.

உண்மையான எண்ணிக்கை அதனை விடவும் அதிகமாக இருக்கும். பல இடங்களில் இன்னமும் தீ எரிந்து வருவதனால், அவ்வாறான பகுதிகளுக்கு இதுவரை அதிகாரிகள் செல்லவில்லை. இவ்வாறான நிலையில், அழிவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg