Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காய் ஏங்கித் தவிக்கும் மக்கள்!

In இலங்கை
Updated: 12:04 GMT, Jul 23, 2017 | Published: 12:03 GMT, Jul 23, 2017 |
0 Comments
1220
This post was written by : Varshini

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 150 நாட்களை எட்டியுள்ளது.

இதனை குறிக்கும் வகையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஊர்வலமாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் தாயகப் பகுதியில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் இவ்வாறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg