Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறிகண்டியில் இடம்பெற்ற பொலிஸ் நடமாடும் சேவை

In இலங்கை
Published: 13:03 GMT, Jul 23, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Ravivarman
IMG_4636

‘கிராமத்துக்கு பொலிஸ்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பொலிஸ் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டியில் வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ.ஆர்.எல். பர்னான்டோவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொலிஸ் உயரதிகாரிகள், கிராம சேவையாளர்கள், ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த சேவையானது இம்மாதம் எதிர்வரும் 22ம் திகதிவரை குறித்த பகுதியில் இடம்பெறவுள்ளதுடன், பிரதேச மக்கள் தமது பொலிஸ் சேவையினை குறித்த பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என இதன்போது சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய மாவட்டங்கள் தோறும் இவ்வாறான நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_4653 IMG_4648 IMG_4647

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg