Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிய தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம்!

In இலங்கை
Published: 16:21 GMT, Jul 23, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Ravivarman
gmoa-720x480

தமது கோரிக்கைகளுக்கு நாளை உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில், நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அச்சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு உறுதியளித்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாளை எமக்கு உரிய பதிலை வழங்க வேண்டும். ஏற்கனவே நாம் முன்னெடுத்த போராட்டங்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இந்நிலையிலேயே நாளை மறுதினம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg