Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: தமிழிசை

In இந்தியா
Updated: 06:58 GMT, Jul 24, 2017 | Published: 04:47 GMT, Jul 24, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
thamizhisai soundararajan

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கு மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் நாற்பதிற்கும் அதிகமானவை தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 148 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பன்னாட்டு சட்டதிட்டங்களை பின்பற்றியே தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட தமிழிசை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg