Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயுதங்களால் நீதித்துறையை அடிபணிய வைக்க முடியாது: மல்வத்து பீடம்

In இலங்கை
Updated: 06:26 GMT, Jul 24, 2017 | Published: 05:06 GMT, Jul 24, 2017 |
0 Comments
1296
This post was written by : Varshini

நல்லாட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டுமெனவும், ஆயுதங்களால் அச்சுறுத்தி அதனை அடிபணிய வைக்க முடியாதெனவும் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள மல்வத்து பீடம், உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

யாழ். நல்லூர் வீதியில் நேற்று முன்தினம் மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மற்றுமொருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg