Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் படைவீரர்களுடன் பலஸ்தீனியர்கள் மோதல்

In உலகம்
Published: 05:50 GMT, Jul 24, 2017 |
0 Comments
1460
icon_com
This post was written by : Sylviya

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பலஸ்தீனியர்கள் பலர் இஸ்ரேல் படைவீரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மோதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள், இஸ்ரேல் படைவீரர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மூடப்பட்டு கிடந்த புனித தளம் ஒன்று கடந்த வாரம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் அதன் வாசலில் உலோகத்தில் அமையப்பெற்ற கண்டுபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.

அந்த நடவடிக்கைக்கு பல முஸ்லிம் சபைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீனியர்கள பலர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இஸ்ரேல், உலோகத்தில் அமையப்பெற்ற கண்டுபிடிப்புக் கருவிகள் அகற்றப்படாது எனவும் ஆனால் அவற்றின் பாவனை காலப்போக்கில் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg