Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தமிழுக்கு தாவிய சாய்பல்லவி!

In சினிமா
Published: 05:59 GMT, Jul 24, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Surenth
Karu Movie With Saipallavi

ப்ரேமம் திரைப்படத்திற்கு பிறகு தேடி வந்த தமிழ் திரைப்பட வாய்ப்புகளை மறுத்த சாய் பல்லவி மீண்டும் ‘கரு’ திரைப்படம் மூலம் தமிழில் நடிக்கவுள்ளார். ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய இரசிகர்களின் விருப்பமான நடிகையானவர் சாய்பல்லவி.

கோவையை சேர்ந்த சாய்பல்லவிக்கு ப்ரேமம் திரைப்படத்துக்கு பிறகு பல வாய்ப்புகள் தேடி வந்தன. முக்கியமாக முன்னணி இயக்குநர்கள் மணிரத்னம், கௌவுதம்மேனன், முன்னணி ஹீரோக்கள் விக்ரம், சிம்பு ஆகியோரின் திரைப்படங்களில் நடிக்க கேட்டபோது கூட முடியாது என்று மறுத்துவிட்டு டொக்டர் படிப்பை தொடர சாய்பல்லவி சென்றுவிட்டார்.

இப்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘கரு’ என்ற திரைப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

‘கரு’ திரைப்படத்துக்கு பின் தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாய்பல்லவி. ஆனால் முன்பு சாய்பல்லவியால் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகம் என சினி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg