Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த தலைமைத்துவத்தின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: முத்து சிவலிங்கம்

In இலங்கை
Published: 06:25 GMT, Jul 24, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Vithushagan

தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும்  என நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ, டியன்சின் பகுதியில் மக்களின் தேவைக்காக புணரமைக்கப்பட்ட வீதி, டியன்சின் மற்றும் கெம்பியன் பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கான சிலைகள், விளையாட்டு உபகரணங்கள், அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் போன்றன வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  ”இந்திய பிரதமரை நாங்கள் தனியாக சந்தித்து எங்கள் மக்களுக்கு இரண்டு இலட்சம் வீடுகளை அமைத்து கிராமங்களாக மாற்றி தருமாறு கேட்ட போது அதற்கு அவர் ஏன் வீடு வழங்க வேண்டும் என்றார்.

அதற்கு ஆறுமுகன் தொண்டமான் உங்கள் அரசாங்கம் தான் எங்களை இங்கு அனுப்பியுள்ளது இந்திய அரசாங்கத்தினால் நாங்கள் எதனையும் பெறவில்லை. டெல்லி எமது மக்களை இங்கு அனுப்பியதனால் தான் எம் மக்கள் அடிப்படை வசதி இன்றி திண்டாடுகிறார்கள்.

கால் ஏக்கர், அரை ஏக்கர் என ஐந்து லட்சம் பேர் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கின்றதே தவிர எமது தோட்டங்களை விருத்தி செய்யவில்லை.

அரசாங்கம் தேயிலை தோட்டங்களை விருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மக்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்திருக்கலாம்.

அரசாங்கம் நினைத்திருந்தால் வீடுகள் கட்டியிருக்கலாம், வீதிகள் அமைத்திருக்கலாம், ஆங்காங்கே ஓரிரு வீடுகள் கொடுப்பதன் மூலம் ஒரு சமூகம் ஒரு போதும் முன்னேறாது எனவே சரியான முறையில் திட்டங்கள் வகுத்து வீடுகளை கட்ட வேண்டும்.

தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். அண்மைகாலத்தில் பல உறுதியான தலைவர்கள் இன்மையால் நாம் பல பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DSC06420 DSC06432 DSC06443

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg