Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேநீரில் நச்சுப்பொருட்கள்! – ஐவரின் நிலை கவலைக்கிடம்

In இந்தியா
Published: 06:09 GMT, Jul 24, 2017 |
0 Comments
1282
This post was written by : Varshini

வட இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள கடையொன்றில் தேநீர் அருந்திய 23 பேர், சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிர்ஸாபூர் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றின் தேநீர் கடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேநீர் அருந்திய இவர்கள், சுமார் 30 நிமிடங்களின் பின்னர் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களில் ஐவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பருகிய தேநீரில் நச்சுத்தன்மை காணப்பட்டுள்ளமை, பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னர், குறித்த தேநீர் கடையின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த தேநீர் கடையில் தேநீர் அருந்திய 27 பேர் சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சம்பவத்தின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனையிட்ட போது, தேநீரில் நச்சுப்பொருட்கள் கலந்திருந்தமை உறுதியாகியிருந்ததாக மிர்ஸாபூர் பொலிஸ் அத்தியட்சகர் அஸிஸ் திவாரி தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த கடை சீல் வைத்து மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த கடையில் மீண்டும் தேநீர் வியாபாரத்தை முன்னெடுத்த கடை உரிமையாளரை துரித கதியில் கைதுசெய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg