Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை பாதுகாப்பு படையினரை இந்தியா உடன் மீளப் பெற வேண்டும்: சீனா

In இந்தியா
Updated: 06:57 GMT, Jul 24, 2017 | Published: 06:57 GMT, Jul 24, 2017 |
0 Comments
1314
This post was written by : Varshini

எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரை இந்தியா உடன் மீளப் பெற வேண்டுமென, சீனா வலியுறுத்தியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வூ கியான் (wu qian) இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இது அடிப்படையானதென குறிப்பிட்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், இது சீனாவின் நிபந்தனை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இரு நாடுகளினதும் எல்லைகளின் அமைதியும் ஸ்திரத்தன்மையும், அந்நாடுகளின் எல்லைப்பகுதியில் காணப்படும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையிலேயே தங்கியுள்ளதெனவும், இரு நாடுகளின் மக்களதும் அடிப்படை நலன் சார்ந்ததெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எல்லை தொடர்பில் வீண் மாயைகளை இந்தியா உருவாக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, சீன பிராந்திய பாதுகாப்பு கடமையில் சீன மக்கள் விடுதலை ராணுவம் (People’s Liberation Army) 90 வருட கால வரலாறு கொண்டதென குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மலையைக்கூட அசைத்துவிடலாம், ஆனால் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை அசைக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg