Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிணற்றை விற்ற ஓ.பி.எஸ்: கொந்தளிக்கும் கிராம மக்கள்

In இந்தியா
Published: 08:07 GMT, Jul 24, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Puvanes
panneer_selvan001

40 ஏக்கர் நிலப்பரப்பினையும் கிணற்றையும் விற்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக தேனி – லட்சுமிபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம், லட்சுமிபுரம் பகுதியில் ஓ.பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான இடத்தில் பாரிய கிணறு தோண்டப்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த கிராமத்தினர், கிணறு அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பான 40 ஏக்கர் காணியினையும் விலைக்கு வாங்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் நிதி சேகரிக்கப்பட்டு குறித்த நிலத்தினை கிராமத்தினர் வாங்கிக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்ட பின்னர் கிணற்றினையும் நிலத்தினையும் பன்னீர் செல்வம் இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார்.

எனினும், நேற்று இரவு லட்சுமிபுரம் கிராம மக்களின் கமிட்டி கூட்டத்தின் போது கடந்த 12ஆம் திகதி மொத்த நிலத்தினையும் பன்னீர் செல்வம் வேறு ஒருவருக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பன்னீர் செல்வம் தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக கிராம மக்கள் ஆவேசமடைந்துள்ளதோடு பன்னீர் செல்வத்தின் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg