Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விண்வெளியிலும் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ!

In தொழில்நுட்பம்
Updated: 09:04 GMT, Jul 24, 2017 | Published: 09:04 GMT, Jul 24, 2017 |
0 Comments
1298
This post was written by : Surenth

உலகின் பல பகுதிகளையும் ஒளிப்படம் பிடித்து, எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பயணம் செய்யக்கூடிய வசதியை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ தருகின்றது. இதன்மூலம் உங்கள் கணினியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) தெளிவாகப் பார்க்க முடியும்.

கடந்த 16 ஆண்டுகளாக விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமிக்குள் பயன்படுத்தப்பட்ட கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ, பூமிக்கு அப்பால் சென்று விண்வெளியிலும் காலடி பதிப்பதற்கான முயற்சிகளில் கூகுள் மேப் இறங்கியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தினை கூகுள் மேப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 360 டிகிரி ஒளிப்படங்களை எடுத்து கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தக்குழு மார்ஷல் ஸ்பேஸ் சென்டரில் டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளிப்படங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முன்னதாக, 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமானது முதன்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்டெராக்டிவ் முறையில் (Interactive) பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியது.

அதன்பின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு மாயத்தோற்ற முறையில் (Virtual Reality) பயணம் செய்யும் வசதியை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை கூகுள் மேப் உடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg