Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யா இரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

In சினிமா
Updated: 09:17 GMT, Jul 24, 2017 | Published: 09:11 GMT, Jul 24, 2017 |
0 Comments
1226
This post was written by : Vithushagan

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள திரையரங்கில் அவரது திரைப்படங்கள் ஒரு வாரம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா பல வருடங்களாக திரைத்துறையில் தனது நடிப்பால் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல சிரமங்களை அவர் சந்தித்தாலும் தனது கடின உழைப்பால் பல தடைகளை கடந்தவர் .

அவரது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட நினைத்த கோவை ரசிகர்கள் அவர் நடித்த திரைப் படங்களை ஒரு வாரம் தொடர்ந்து திரையிட முடிவெடுத்தனர்.

கோவையில் உள்ள பழம் பெருமை வாய்ந்த திரையரங்கமான ராயல் திரையரங்கில் அவரது படம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திரையிடப்பட்டு வருகிறது.

வெள்ளிகிழமை முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சிங்கம் படம் திரையிடப்பட்டது.

நாளை (செவ்வாய்க்கிழமை) வெங்கட் பிரபு இயக்கிய மாஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும் அவர் நடித்து சில்லுனு ஒரு காதல் மற்றும் கஜினி படங்கள் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரையிடப்படும் .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg