Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி பிரணாப் நாட்டு மக்களுக்கு விசேட உரை

In இந்தியா
Updated: 09:26 GMT, Jul 24, 2017 | Published: 09:25 GMT, Jul 24, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Pranab Mukherjee

பதவிக்காலம் நிறைவடைந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று (திங்கட்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரையை நிகழ்த்தவுள்ளார்.

இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள அவரது உரையை, நாட்டிலுள்ள சகல தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் ஒலி, ஒளிபரப்புச் செய்ய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரியதும் மதிப்பிற்குரியதுமான ஜனாதிபதி பதவியில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள பிரணாப், இன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறவுள்ளார்.

இவருக்கு நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதோடு, நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு, நாளைய தினம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg