Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய மீலாத் விழாவையொட்டி கிளிநொச்சியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

In இலங்கை
Published: 11:18 GMT, Jul 24, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Ravivarman
gh

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) மேற்படி கூட்டம் இடம் பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய மீலாத் விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் பல முக்கிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செயற்படுத்துவதும் இதில் ஒரு பிரதான அம்சமாகும்.

இவ்வாண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவது, தேசிய மீலாத் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் என்பன தொடர்பான விடயங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சி.சத்தியசீலன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்,ஆர்.எம்.மலிக், தபால் சேவை, முஸ்லிம் சமய அமைச்சின் ஆலோசகர் எம்.எச்.முயினுதீன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

kk hh

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg