Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீருடையில் மறைந்திருந்து குற்றங்களை செய்வதற்கு இடமளிக்க முடியாது: கயந்த

In இலங்கை
Published: 11:45 GMT, Jul 24, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Vithushagan

சீருடையில் மறைந்திருந்து குற்றங்களை செய்வதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதால் படையினர் எவ்வாறு பாதிக்கப்படுவர்  அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதனை சிலர் படையினரை பலிக்காடாவாக்கும் செயல் என்று விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் அரசியல் இலாபம் தேடும் பிரசாரம் என்று குற்றம் சுமத்தினார்.

இராணுவத்தினர் குறித்து கருத்தை தெரிவிப்பவர்கள் இராணுவத்திற்காக பெரும் சேவை ஆற்றிய மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு உரிய பாதுகாப்பபை வழங்கவில்லை .

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தியாகத்துடன் பணிபுரிந்த சரத் பொன்சேகா அரசியலுக்கு பிரவேசித்தபோது அவருக்கு மரியாதை அளித்த விதத்தை மறந்துவிட முடியாது என்றும் கயந்த கருணாதிலக  சுட்டிக்காட்டினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg