Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைய சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரி மொஸ்கோவில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 13:58 GMT, Jul 25, 2017 | Published: 12:14 GMT, Jul 25, 2017 |
0 Comments
1319
This post was written by : Varshini

இணைய சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு கோரி, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து, மத்திய மொஸ்கோவில் இவ் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான பர்னாஸ் கட்சி மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த இவ் ஆர்ப்பாட்ட பேரணியில், ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்கு முறைக்கு எதிராக மற்றும் இணைய தணிக்கை போன்றவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை தாங்கியிருந்தனர்.

அத்தோடு, ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக சிலர் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

தம்முடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் ஒரு இடமாக இணையம் காணப்படும் நிலையில், அதன் மீதான தணிக்கை மக்களின் உரிமையை நசுக்கும் செயற்பாடாகுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி புட்டினுக்கு எதிரான சின்னங்களை தாங்கியிருந்த சிலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg