Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாபிலவு காணிகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

In இலங்கை
Published: 13:41 GMT, Jul 24, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman

கேப்பாபிலவுக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணிகளை விடுவிக்குமாறு கோரியே இன்று (திங்கட்கிழமை) மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மேற்படி கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜுன் மாதம் 23ந் திகதி தங்களை நான் சந்தித்த பொழுது 70 ஏக்கர்கள் 02 றூட்கள் அடங்கிய காணித்துண்டு உட்பட கேப்பாபிலவில் உள்ள எல்லாக் காணிகளையும் விரைவில் விடுவிக்கும்படி படையினருக்குக் கூறும்படி தங்களிடம் கோரியிருந்தேன். தாங்களும் அவ்வாறு செய்வதாக எனக்கு உறுதியளித்தீர்கள்.

இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் கடந்த 141 நாட்களாக கேப்பாபிலவில் படையினர் தங்கியிருக்கும் காணி நுழைவாயிலுக்கு முன்பாக அமர்ந்திருந்து, தமது வாழ்விடங்களில் தாங்கள் மீண்டும் குடியமர்ந்து வாழ்வாதார நடவடிக்கைகளை ஆம்பிப்பதற்காகத் தமது காணிகளை விடுவிக்கும்படி கோரி தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருவதை அதிமேதகு தாங்களும் அறிவீர்கள்.

குடிமக்கள் தமது காணியில் இருந்து இடம்பெயர்ந்த பின்பு அக்காணிகளில் இடம்பெறும் எத்தகைய செயற்பாடுகளும் குறித்த காணிகள் சட்டத்தின்படி கையகப்படுத்தப்படாமலேயே நடைபெற்று வருகின்றன.

போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இம் மக்கள் நீண்டகாலமாக மிகுந்த துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு காணிகள் எல்லாமே அதன் உரிமையாளர்களான மக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கு அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலுவான கோரிக்கையை நான் விடுக்கிறேன்” என மேற்படி கடிதத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg