Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:46 GMT, Jul 24, 2017 | Published: 16:46 GMT, Jul 24, 2017 |
0 Comments
1293
This post was written by : Sivaguru Siva

வேல்ஸ்இளவரசி டயானா மரணமடைந்ததன் 20 ஆம் ஆண்டுநினைவை முன்னிட்டு பிரித்தானியாவின்  ஐ.ரி.வி தொலைக்காட்சிசேவையில் இன்றிரவு உள்ளுர்நேரம் ஒன்பது மணியளவில் சிறப்பு ஆவணப்படம் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் தமது அன்னைகுறித்து இளவரசர்;கள் வில்லியமும் ஹரியும் மனம் திறந்து பேசியுள்ளனர்.

தம்மை குறும்புமிகுந்த பிள்ளைகளாக வளர தமது அன்னை ஊக்கப்படுத்தியது  மற்றும், அரண்மனையிலுள்ளவர்களுக்கு தெரியாமல் இனிப்புகளை இரகசியமாக கொண்டுவந்து வழங்கியமை போன்ற பழைய நினைவுகளை இந்த ஆவணத்தில் இருவருமே பேசியுள்ளனர் .

தனது பிள்ளைகளிடம் பாட்டி டயானா குறித்து அதிகம் பேசுவதாகவும் இளவரசர் வில்லியம் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இருவருமே டயானா மரணமடைய முன்னர் தம்முடன்; பேசிய இறுதி தொலைபேசி உரையாடலை விரக்தியின் அவசரதொலைபேசி அழைப்பு எனவும் வர்ணித்துள்ளனர்

தனது வாழ்வு முழுவதும் தான் வருந்தும் ஒரேயொரு விடயமாக டயானாவின் அந்த குறுகிய தொலைபேசி அழைப்பை குறிப்பிடுகின்றார் இளவரசர் ஹரி.

இளவரசி டயானா பரிஸ்நகரில் அகால மரணமடைந்போது  இளவரசர் ஹரி 12 வயதுச்சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

_97061811_40d672a6-05ad-457a-b6d5-8a6484f0b29c

கடுமையான வரட்சிகாரணமாக இத்தாலியின் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன.

இந்தநிலைமை இத்தாலிய விவசாயத்துறைக்கு ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஈரோ நிதியிழப்பை உருவாக்கியுள்ளது.

இதே சமகாலத்தில் ரோம் நகரில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கிவருகின்றது.

_97060616_3feb35a3-d38c-42da-ad23-eb00974cea93

சுவிஸ்- ஜேர்மன் எல்லைநகரான ஸாப்குசைனில் இன்று இயந்திரவாள் ஒன்றால்  மக்களை வெட்டிய தாக்குதலாளியை சுவிஸ் காவற்துறை தீவிரமாக தேடிவருகின்றது. இந்தத்தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவக் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களை இலக்குவைத்து தாக்குதலை நடத்திய மேற்படி 51 வயதான நபர் மிக ஆபத்தான மனிதர் என வர்ணித்துள்ள காவற்துறை மக்களை எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கும்; பயங்கரவாத நடவடிக்கைக்கும் இடையில் தொடர்பு இல்லையெனவும் அறிவிக்கபட்டுள்ளது.

3346

உலகில் பயங்கரவாதத் தாக்குதல்களை அதிகம் எதிர்நோக்கும்; நகரம்ஆப்கான் தலைநகர் காபூல் என ஐக்கியநாடுகள் சபை குறிப்பிட்ட நிலையில் மீண்டும் காபூலில் தற்கொலைத்தாக்குதல் ஒன்று  இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 29 பேர் பலியாகி 42 பேர் காயமடைந்தனர்.

அரசபணியாளர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தைகொண்டு இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

ஆப்கானின் முக்கிய அரசியல்வாதியாக உள்ள முகமத் முககுக்கின் வதிவிடத்துக்கு நடத்தப்பட்ட இந்தத்தாக்குதலுக்கு இதுவரை எந்தஅமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

images

தமிழகத்தில் பெரும் தங்கக்கடத்தல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது  இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சுமார் 27கிலோ தங்கத்தை இ;ந்திய வருமானவரி புலனாய்வுத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் ராமநாதபுர கடற்கரைப்பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில்வாகனமொன்றில் கடத்தபட்ட 10 கிலோ தங்கம் பிடிபட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 4 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg