Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலையற்ற பட்டதாரிகள் சுயதொழில் முயற்சிக்கான வழிகளில் ஈடுபடவேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

In இலங்கை
Updated: 16:51 GMT, Jul 24, 2017 | Published: 16:51 GMT, Jul 24, 2017 |
0 Comments
1395
This post was written by : Ravivarman

வேலையற்ற பட்டதாரிகளான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்புக்காக போராட்டங்களை நடத்தும் அதேவேளை சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தொவிக்கையில்,

”சுயதொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
கிடைக்கப்பெறும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்புப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அக்கறைகொள்ளாத அரசியல் தலைமைகளுக்கு, இளைஞர், யுவதிகள் சிறந்த பாடத்தை எதிர்வரும் காலத்தில் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்

துரதிஷ்டவசமாக திருகோணமலையிலும் பொய் வாக்குறுதிகள் வழங்கி தமிழ்மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள். அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இணக்க அரசியலில் காலத்தை வீண் விரையம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

நாற்பது வருடங்களாக திருமலை மக்கள் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவைக் கண்டுவருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்” என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg