Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் வன்முறைகளைத் தடுப்பதற்கு குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கது: மாவை

In இலங்கை
Published: 17:12 GMT, Jul 24, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Ravivarman
download

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக் கூடாது என்று மக்கள் குரலெழுப்பி வருவது வரவேற்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதும், நீதித்துறைக்குச் சவாலை ஏற்படுத்தியிருப்பதும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதென வற்புறுத்துகின்றோம்.

இத்தகைய சம்பவங்களினால் வடக்கில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் கைவிடப்படுவதன் மூலம் மீண்டும் காவல்துறையின், இராணுவ அடக்கு முறையின் தேவை ஏற்பட்டுள்ள தென்ற ஒரு நிலையை அரசு ஏற்படுத்திவிட இடம் அளித்துவிடக் கூடாது.

நீதிபதி இளஞ்செழியன் மீது, நீதித்துறையின் மீது வன்முறை, துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டிருப்பதன் உண்மையை அறிய வேண்டும். இது ஒரு தனி நபரின் செயலா அல்லது இதற்குப் பின்னணியிலுள்ளவரின் திட்டமிட்ட சதியா என்பதை தகுந்த சட்ட பூர்வமான விசாரணையினால் கண்டறியப்பட வேண்டும்.

பொதுமக்களை மட்டுமல்ல நீதிபதிகள், நீதித்துறையை பாதுகாக்கவும் பொருத்தமான நடவடிக்கைகளை ஜனாதிபதியும், சர்வதேச சமூகமும் உடன் எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்துகின்றோம்” என்றும் அந்த அறிக்கையில் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg