Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆணை பிறப்பித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கயந்த கருணாதிலக

In இலங்கை
Published: 02:57 GMT, Jul 25, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Elakkiya

இராணுவ வீரர்களுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்களோ ஒழுங்கு நடவடிக்கைகளோ எடுக்கப்படாது. எனினும் ஆணை பிறப்பித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என காணி மற்றும் நாடாளுமன்ற புனர்நிர்மாண அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘இராணுவ வீரர்களை சட்டத்தின்முன் கொண்டுவந்து விசாரணை செய்யும் போது அதற்கு ஆணையிட்டவர்கள் தொடர்பான விபரங்களும் வெளிவரும். இதனால் தாம் இராணுவ வீரர்கள் மீது அன்புள்ளவர்கள் போன்று சிலர் நடிக்கின்றனர்.

இராணுவ வீரர்களின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டுமாயின் தவறு செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒருசிலர் புரிந்த தவறுகளுக்காக அனைத்து பழியையும் இராணுவமே பொறுப்பேற்கவேண்டி ஏற்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg