Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் வெள்ள அனர்த்தம்: 70 பேர் பலி

In இந்தியா
Published: 04:31 GMT, Jul 25, 2017 |
0 Comments
1269
icon_com
This post was written by : Puvanes

கடந்த சில நாட்களாக குஜராத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரையிலும் 70 பேர் பலியாகியுள்ளதோடு 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், வெள்ளத்தினால் பனஸ்கந்தா பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுவதோடு அங்கிருந்து சுமார் 10300 பொதுமக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றபோதும், கனமழை மற்றும் சூறாவளி காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால், மேலும் 6 தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் குஜராத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg