Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மாரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் உணவு தட்டுப்பாடு!

In உலகம்
Published: 06:28 GMT, Jul 25, 2017 |
0 Comments
1307
icon_com
This post was written by : Sylviya

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து தற்போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் புதிய நோய்கள் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலைமை காரணமாக மின்து பகுதியில் உள்ள சுமார் 5000 பேர் தற்காலிக முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேற்படி தற்காலிக முகாம்களில் வாழ்வது மிகக் கடினம் என சில பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “வெள்ளம் காரணமாக நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளளோம். தற்போது உணவுத் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்து வருகின்றோம். நாளாந்த தேவைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஒரு தொழிலை தேடும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன்” என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றொருவர், “நாம் உயிருடன் இருக்க வேண்டுமானால் நீர் மட்டம் குறைவடையும் நேரங்களில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அவ்வாறு மீன்படித்து எமது பசியைப் போக்கிக்கொண்டாலும், எமக்கு ஏற்பட்டுள்ள பட்டினி நிலைமை தீராது” என தெரிவித்தார்.

இதே வேளை, மியன்மாரில் தொடரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கக் கூடும் என மியன்மாரின் வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg