Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இவ்வருட இறுதிக்குள் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வாரா ட்ரம்ப்?

In
Updated: 10:18 GMT, Jul 25, 2017 | Published: 08:22 GMT, Jul 25, 2017 |
0 Comments
1411
icon_com
This post was written by : Sylviya
09

பிரதமர் மேயின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னர் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றை மேற்கொள்ள ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இவ்வருட இறுதிக்கு முன்னர் அவர் பிரித்தானியாவில் தடம் பதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திலேயே அவர் பிரித்தானியாவுக்கு வரவேண்டும் என பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார்.

இருப்பினும், ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஸ்திரத்தன்மைக்கு ட்ரம்ப் அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரித்தானியர்கள் பலர் கருதுவதாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg