Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார்

In சினிமா
Updated: 11:36 GMT, Jul 25, 2017 | Published: 11:35 GMT, Jul 25, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Risha
siraj

திரையுலகில் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குனர் சிராஜ் தனது 69 வயதில் மாரடைப்பால் காலமான நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி இடம்பெற்றது.

நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், ராமராஜன் நடித்த ‘என்னை பெத்தராசா’, ‘தங்கத்தின் தங்கம்’, ‘ஊரெல்லாம் உன்பாட்டு’, மற்றும் ‘ராஜாங்கம்’, ‘சுயம்வரம்’ படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சிராஜின் மறைவிற்கு திரை உலகினர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg