Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபுதேவா இயக்கத்தில் விஷால்- கார்த்தி நடிப்பில் தனித்தனி படம்

In சினிமா
Updated: 11:46 GMT, Jul 25, 2017 | Published: 11:45 GMT, Jul 25, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Risha
karthivishal

நடிகர்களான விஷால் மற்றும் கார்த்தியை வைத்து, பிரபுதேவா தனித்தனி படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் மற்றும் கார்த்தியின் திகதிகள் கிடைப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓகஸ்டு மாதம் முதல் விஷால் ஷசண்டக்கோழி 2’ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.

எனவே இந்த படம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசுடன், பிரபுதேவா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg