Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு நீதித்துறையினரின் பங்கேற்புடன் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக்கிரியை (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 02:28 GMT, Jul 26, 2017 | Published: 02:28 GMT, Jul 26, 2017 |
0 Comments
2703
This post was written by : Risha

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக்கிரியைகள், அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக நீண்ட காலம் பணியாற்றிய குறித்த பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகளில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, நீதிபதி இளஞ்செழியன் உள்ளிட்ட வடக்கு மாகாண நீதிபதிகள், நீதவான்கள், நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நேற்றைய தினம் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு என நாட்டின் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_1204

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg