Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்” மகிழ்ச்சியின் உச்சத்தில் தனுஷ்

In சினிமா
Published: 05:46 GMT, Jul 26, 2017 |
0 Comments
1833
icon_com
This post was written by : Puvanes
vip2 dhanush001

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன், என் சினிமா பயணமும் அருமையாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

விஐபி 2 திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், கடவுள் ஆசியால் தான் இந்த அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன் எனக் கூறிய தனுஷ் தற்போதைய சினிமாவில் தானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் நடிக்க வந்த ஆரம்பத்தில் இந்த முகமெல்லாம் நடிக்க வந்துவிட்டது என்ற கேலிப்பேச்சுகள் அதிகரித்திருந்தது. அவரே இதனை மேடைகளில் தெரிவித்தும் இருந்தார்.

இப்போது தனது கடின உழைப்பால் ஹாலிவுட் வரை சென்று விட்ட தனுஷ், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பல்வேறு பரிமானங்களையும் எடுத்து கலக்கி வருகின்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg