Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷிரந்தி, யோசிதவிடம் CID விசாரணை?

In இலங்கை
Updated: 05:44 GMT, Jul 26, 2017 | Published: 05:43 GMT, Jul 26, 2017 |
0 Comments
1650
This post was written by : Varshini

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காக, இவர்களை நாளைய தினம் (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாஜூதீனை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஷிரந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய நிறுவனத்தின் பயன்பாட்டில் இருந்தமை ஏற்கனவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு, தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் முன்னாள் ராணுவ வீரரும் மஹிந்தவின் விசுவாசியுமான திஸ்ஸ என்பவருடன், யோசித ராஜபக்ஷ தொடர்பு வைத்திருந்ததாகவும் சில ஆதாரங்கள் வெளிவந்தன. இவற்றின் அடிப்படையிலேயே ஷிரந்தி மற்றும் யோசிதவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg