Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரியல் மெட்ரிட் அணியில் தொடர்ந்தும் நீடிக்க ரொனால்டோ விருப்பம்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:26 GMT, Jul 26, 2017 | Published: 06:51 GMT, Jul 26, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Anojkiyan
Football Soccer - FIFA Awards Ceremony - Men's Player of the Year

கால்பந்து அரங்கில் புகழ் பூத்த வீரராக திகழும் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தொடர்ந்தும் ஸ்பெயினின் முன்னணி கழக அணியான ரியல் மெட்ரிட் அணியில் நீடிப்பதை உறுதிசெய்துள்ளார்.

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அந்த வததந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரியல் மெட்ரிட் அணியில் நீடிப்பது குறித்து மனம்திறந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”கடந்த வருடம் என்னுடைய கழகம் முக்கியமான கிண்ணங்களை வென்றது மிகவும் சிறப்பானது. நான் அதை தனிப்பட்ட கிண்ணங்களாகத்தான் விரும்புகிறேன். அதை திரும்பவும் வென்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் அதை தொடர்ந்து செய்வேன். கால்பந்து என்னுடைய வாழ்க்கை. அதுதான் என்னுடைய விருப்பம்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg