Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோடி எச்சரிக்கை!

In இந்தியா
Updated: 06:44 GMT, Jul 26, 2017 | Published: 06:44 GMT, Jul 26, 2017 |
0 Comments
1359
icon_com
This post was written by : Risha
modi-111

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாக்களிக்க தெரியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் எனத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்த பிரதமர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லுபடியாகாத வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதிருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தவறினால் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கான வாக்கு சதவீதம் குறைந்து. எனவே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg