Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜீவசமாதி அடையும் பொருட்டு உணவை தவிர்க்கும் முருகன்!

In இந்தியா
Updated: 07:08 GMT, Jul 26, 2017 | Published: 07:08 GMT, Jul 26, 2017 |
0 Comments
2053
This post was written by : Risha

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன், ஜீவசமாதி அடையும் பொருட்டு தற்போது ஒருநேர உணவையும் தவிர்த்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைவாழ்வை தொடரவிரும்பாத நிலையில், சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கோரியிருந்த முருகன், கடந்த 18ஆம் திகதி முதல் ஒரு நேர உணவை உட்கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது அதனையும் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg