Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தூத்துக்குடி – திருச்சி அணிகள் மோதல்

In கிாிக்கட்
Published: 08:35 GMT, Jul 26, 2017 |
0 Comments
1420
icon_com
This post was written by : Anojkiyan
tyl

இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் ரூபி திருச்சி வோரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி அணி ஆரம்ப போட்டியில் திண்டுக்கல் டிரகன்ஸ் அணியை வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் திருச்சி வோரியர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. அந்த அணி 2வது வெற்றியை நோக்கி இன்று களமிறங்குகின்றது.

பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வோரியர்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg