Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ ஒத்துழைப்புக்கள் தொடர்பில் ரஷ்யா-ஈராக் இடையில் கலந்துரையாடல்

In ஐரோப்பா
Updated: 09:21 GMT, Jul 26, 2017 | Published: 09:20 GMT, Jul 26, 2017 |
0 Comments
1287
icon_com
This post was written by : Elakkiya
34f163be-bebe-46ac-80a8-b0168b04084a

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் ஈராக் துணை ஜனாதிபதி நூரி அல்-மாலிகி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய நகரான செயின் பீட்டர்ஸ்பேர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பொருளாதாரம் மற்றும் இராணுவ-தொழில்நுட்ப உறவுகளை வலுவூட்டுதல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மேலும், பொருளாதார ஒத்துழைப்பு அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து செய்ய வேண்டியது ஏராளம் உண்டு. குறிப்பாக இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அவசியம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈராக் துணை ஜனாதிபதி மாலிகி, ‘ ஒவ்வொரு வருகையின் போதும் எமது உறவுகளை மேம்படுத்துவதற்கான பொது இலக்கை நோக்கிய மற்றுமொரு பாதையை நாம் தேர்தெடுக்கின்றோம்.

மொஸ்கோ மற்றும் பாக்தாத் ஆகிய நாடுகள் ஆற்றல், பொருளாதாரம் மற்றும் இராணுவ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்புகளை கொண்டுள்ளன.பல இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவற்கான திறனை கொண்டுள்ளன. எங்களுடைய மூலோபாயக் கொள்கைகள் பிராந்தியத்திலும் ஈராக்கிலும் ரஷ்யாவின் பங்களிப்பை அடிப்படையாக கொண்டது’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்பின்போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg