Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான காளான் குடைமிளகாய் பொரியல்!

In
Published: 09:46 GMT, Jul 26, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Vithushagan
las-720x480

உங்களுக்கு குடைமிளகாய் பிடிக்குமானால், காளானை குடைமிளகாயுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள். சரி, இப்போது அந்த காளான் குடைமிளகாய் பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காளான் – 250 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 2 பல் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். பின்னர் பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காளான் குடைமிளகாய் பொரியல் தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg