Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெற்றோலிய பிரச்சினையால் நாடாளுமன்றில் அமளி

In இலங்கை
Published: 10:48 GMT, Jul 26, 2017 |
0 Comments
1566
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

பெற்றோலிய ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக நாடாளுமன்றில் பெரும் அமளி ஏற்பட்ட நிலையில், சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், கேள்விகளை தொடுத்த நிலையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

தொடர்ந்தும் நாடாளுமன்றில் அமைதியின்மை நிலவியதை அடுத்து, சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg