Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதியில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

In இந்தியா
Published: 04:18 GMT, Jul 27, 2017 |
0 Comments
1403
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தமிழக விவசாயிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்ற நிலையில், நேற்றைய தினம் வீதியில் உருண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் 5 விவசாயிகள் வீதியில் உருள, ஏனைய விவசாயிகள் அவர்களுக்கு பின்னால் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சென்றுள்ளனர்.

ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து, சுமார் 150 மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு வரை அவ்வாறு சென்ற விவசாயிகள் பின்னர் திரும்பி வந்துள்ளனர்.

இப் போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, இந்திய குடிமக்களை தலைநிமிர வைப்பேன் என கூறி பதவிக்கு வந்த பிரதமர் மோடி, இன்று மக்களை நடந்துசெல்லவும் முடியாமல் உருண்டு செல்ல வைத்துவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்தார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வேளாண்மை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 16 நாட்களாக விவசாயிகள் பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg