Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பில் கொன்சர்வேற்றிவ் கட்சியின் நிலைப்பாடு!

In
Updated: 08:24 GMT, Jul 27, 2017 | Published: 08:23 GMT, Jul 27, 2017 |
0 Comments
1775
This post was written by : Sylviya

ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பில் கடந்த காலங்களில் கொன்சர்வேற்றிவ் கட்சி தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்த போதும் அண்மைக் காலங்களில் அதன் நிலைப்பாடு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த பகுதியளவிலான குற்றவிலக்கு அளிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இணையத்தளம் ஒன்றிற்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மே பிரித்தானியாவில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை எண்ணி, தான் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.

இதே வேளை, 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் படி 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பட்சத்தில் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg