Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லூர் சம்பவத்திற்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 08:36 GMT, Jul 27, 2017 |
0 Comments
1552
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகளால் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சட்டத்தரணிகள், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு தமது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நீதித்துறையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிய சட்டத்தரணிகள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

இவ் ஆர்ப்பாட்டம் நண்பகலுடன் நிறைவடைந்த போதிலும், இன்று முழுநாளும் தமது நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கப் போவதாக மலையக சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

lawyers protest in hatton (3) lawyers protest in hatton (2) lawyers protest in hatton (1) lawyers protest in hatton (5)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg