Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவை சீனா கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது பிரித்தானியா

In
Published: 09:54 GMT, Jul 27, 2017 |
0 Comments
2259
icon_com
This post was written by : Sylviya

வடகொரியாவினால் முன்னெடுக்கப்படும் ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் சீனா செயற்பட வேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபெலோன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப், அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பெய்ன் மற்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோருடன் இன்று (வியாழக்கிழமை) சிட்னியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் வடகொரியாவை கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பு சீனாவிடம் உள்ளது என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள சீனா, குறித்த பொறுப்பு அனைத்துலக நாடுகளுக்கும் உண்டு எனத் தெரிவித்துள்ளது.

இதே வேளை வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அணுவாயுதச் சோதனைகள் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ஐ.நா, கடந்த 2006 ஆம் ஆண்டு பல தடைகளை விதித்தது. அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஐ.நாவின் பாதுகாப்பு சபையினால் அதிகரிக்கப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg