Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர்கள் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் உதவும்: பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 10:22 GMT, Jul 27, 2017 | Published: 10:22 GMT, Jul 27, 2017 |
0 Comments
1521
icon_com
This post was written by : Elakkiya
201707271409120576_Modi-says-blue-revolution-scheme-will-reduce-the-problems-of_SECVPF

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் இன்னல்களை போக்குவதற்கு ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் உதவும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் கலாநிதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, “மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் பிரச்சினைகள் குறையும். நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கடல்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் மீது கலாம் அதிக அன்பு வைத்துள்ளார் என்று குறிப்பிட்ட மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவே கலாமின் கனவு என்றும் அதனை 75 ஆவது சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் தனது உரையில் மீனவர் பிரச்சினைகள் குறித்து பெருமளவில் கவனம் செலுத்தாதமையும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்காதமையும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg