Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுச்சேரியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சூர்யா!

In கிசு கிசு
Published: 10:11 GMT, Jul 27, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Vithushagan
1476786378-1618

விக்னேஷ் சிவன் இயக்கி நடிகர் சூர்யா நடிக்கும் படமான ” தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் காட்சிகள் தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் , படத்தில் உள்ள முக்கியமான பாடல் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பானது ஒகஸ்டு 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்று படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படல்கள் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது . ஆனால் குறித்த நேரத்தில் பாடல்கள் வெளியாகவில்லை . தற்போது பட்டாம்பூச்சி என்ற பாடல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சிவன் வெளியிட்ட யு டியூப் வீடியோவில் , பட்டாம்பூச்சி பாடல் பற்றி தகவல்களை வெளியிட்டிருந்தனர், இந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg