Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் ஏன் குண்டாகின்றார்கள்?

In
Published: 10:48 GMT, Jul 27, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Kemasiya
66000

தற்காலத்தில் பெண்கள் பொதுவாக  தாம் பிரசவத்தின் பின்னர் குண்டாவதாக எண்ணி கவலைப்படுகின்றர்.  இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இன்றய காலத்தில் பிரசவத்தின் பின்னர் பெண்கள் குண்டாவதற்கு காரணம் என்ன? என்பது பலரின் கேள்வி.

இந்த கேள்விக்கு முற்றப்புள்ளி கொடுக்கின்றனர் வைத்தியர்கள். பிரசவத்தின் பின்னர் பெண்கள் குண்டாவதென்பது தற்காலத்தில் தான் உள்ளதென பெண்கள் நினைப்பது தவறு. எமது பாட்டி, பூட்டி காலம் முதல் பிரசவத்தின் பின்னர் பெண்களின் சற்று உடல் எடை போடுவது வழமை.

இன்றய உலகில் அழகென்றால் மெல்லிய உடலும், வெள்ளைத்தோலும் என்ற எண்ணப்பாங்கு அனைத்து பெண்கள் மனதிலும் வளர்க்கப்பட்டுவிட்டது. இந்த எண்ணமே  பெண்கள் மனதில் தாம் பிரசவத்தின் பின்னர் குண்டாவது அழகில்லை என்ற எண்ணத்தை ஒருவாக்குகின்றது.

உண்மையில் பிரசவத்தின் பின்னர் பெண்கள் குண்டாவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

1. பிரசவ காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து தாய்மார் உணவை உட்கொள்வது உடல் பருமனின் முதல் காரணி.

2. பிரசவம் முடிந்து குழந்தை 1 வயதை தாண்டியும் தாய்மார் குண்டாகவே இருக்கின்றார்கள் என்றால் அவர்களிடம் பால்மா குடிக்கும் பழக்கம் மற்றும் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்காமல் பால்மா குடுக்கும் பழக்கம் இருப்பதே காரணம்.

3. குழந்தை கிடைத்த பின்னர் உடற் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியமானது. பிரசவகாலத்தில் குழந்தைகளுக்கும் சேர்த்து அதிகளவு உணவை சாப்பிட்ட வயிற்றிற்கு பின்னரும் அதிகளவு உணவு தேவைப்படும். எனவே உணவை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரப்பழக வேண்டும்.

4. அத்தடன் கோதுமை மா உருளைக்கிழங்கு உணவுகளை முழுமையாக தவிர்ப்பதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்.

5. பல தாய்மார் குழந்தை பிறந்த பின்னர் வேலைகளுக்கு செல்வதனால் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வதில்;லை. வேலைகளிலும் இருந்த இடத்தில் இருப்பார்கள் வீட்டிற்கு வந்தும் த}ங்குவார்கள். இது கூட உடற் பருமனின் இன்னுமொரு காரணி எனலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg