Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

190 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம்தான்: ஷிகார் தவான்

In கிாிக்கட்
Published: 10:46 GMT, Jul 27, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Anojkiyan
dha

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 190 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) காலி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில், ஷிகார் தவான் 168 பந்துகளில் 31 பவுண்ரிகள் அடங்களாக 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடவுளுக்கு நன்றி. டெஸ்ட் அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. துரதிர்ஷ்டவசமாக விஜய் உடல்நலம் தகுதி பெறவில்லை. சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அதே மன நிலையில் விளையாடவே விரும்பினேன். அதையேதான் வலையிலும் செய்தேன், டெஸ்ட் போட்டிக்குத் தயாரானேன்.

பங்களாதேஷிலும் விரைவில் ஓட்டங்கள் குவித்தேன், ஆனால் அதைவிடவும் இந்த இன்னிங்ஸ் சிறந்தது என்று கருதுகிறேன். ஆடுகளத்தில் பவுன்ஸ் சரியான அளவாக இருந்தது. சுழற் பந்துவீச்சாளர்களுக்குப் பந்துகள் திரும்பவில்லை. அதனால் சுழற் பந்துவீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ள நினைத்தேன். அப்படித்தான் திட்டமிட்டேன், நான் நன்றாக விளையாடியதாக எனக்கே தோன்றுகிறது.

190 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம்தான், இரட்டை சதம் அடிக்க பிடிக்கும். ஏன் 300 கூட அடிக்கப் பிடிக்கும். தவறான தருணத்தில் ஆட்டமிழந்தேன். அது தேநீர் இடைவேளைக்கு முதல் ஓவர் மிட் ஆஃபை கிளியர் செய்து விடலாமென்று நினைத்தேன், நான் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று அடித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் அடித்துப் பார்த்தேன் கைகூடவில்லை. ஏமாற்றம்தான் ஆனால் 190 ஓட்டங்கள் எடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg