Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. அமைதிகாப்பு படையைச் சேர்ந்த ஜேர்மனியர்கள் இருவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 11:54 GMT, Jul 27, 2017 | Published: 11:54 GMT, Jul 27, 2017 |
0 Comments
1569
This post was written by : Elakkiya

வடக்கு மாலி மோதல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அமைதிகாப்பு படையைச் சேர்ந்த ஜேர்மன் படையினர் இருவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லியென், ‘எமது இராணுவ வீரர்கள் இருவர் நாட்டிற்காக தமது உயிர்களை கொடுத்துள்ளனர் என்பதை அறிந்துள்ளோம். இந்த செய்தி மிகவும் கவலைக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு நகரான கவோவிலிருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக்கான காரணம் தெளிவாக அறியப்படவில்லை என்றும் ஜேர்மனிய துணை அட்மிரல் ஜோசிம் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg