Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடை மழை காரணமாக ஜேர்மனியில் வெள்ளம்

In ஐரோப்பா
Published: 11:59 GMT, Jul 27, 2017 |
0 Comments
1648
icon_com
This post was written by : Sylviya

ஜேர்மனியின் கொல்சார் நகரில் பெய்த அடை மழை காரணமாக அதன் நகர மையத்தில் சேற்று நீர் நிரம்பியதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட குறித்த வெள்ளத்தால் சுமார் 40,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடை மழை காரணமாக பல நதிகள் பெருக்கெடுத்து ஓடிவருவதாகவும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த நிலைமை தொடரும் எனவும் அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg