Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:33 GMT, Jul 27, 2017 |
0 Comments
1220
This post was written by : Sivaguru Siva
_97097077_mediaitem97097076

பிரித்தானியாவில் மருத்துவரீதியில் குணப்படுத்தமுடியாத மரபணுக்குறைபாட்டினால் மூளை பாதிப்படைந்த நிலையி;ல் 11 மாத குழந்தையான சார்ளி கார்ட் தனது இறுதிக்காலத்தை எதிர்நோக்கிவருகின்றது.

இந்திநிலையில் சார்ளிகாட்  உலகிலிருந்து விடைபெறுவதற்குரிய இடத்தை தெரிவுசெய்வதற்கும் செயற்கைச் சுவாசகருவியை அகற்றுவதற்காக அனுமதியையும்  இன்று மாலை பிரித்தானிய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமது குழந்தையை காக்க தொடந்தும் போராட்டத்தை நடத்திய சார்ளி கார்ட்டின் பெற்றோர்கள்  தமது சட்டப் போராட்டத்தை இந்தவார முற்பகுதியில் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பிறந்தது முதல் செயற்கைச் சுவாசத்தில் வாழும் சார்ளி கார்டினால் அழுவது பார்ப்பது கேட்பது உட்பட எந்த இயக்கங்களையும் செய்ய முடியாது.

இந்தநோயை குணப்படுத்த முடியாதென மருத்துவர்கள் தெரிவித்தால் செய்கை சுவாசத்தை நிறுத்தி சார்ளி கார்ட்டுக்கு அமைதியான மரணத்தை வழங்கும் படி நீதிமன்றம் பெற்றோரை கோரியமை குறிப்பிடத்தக்கது.

_97090577_gettyimages-619309888

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் போராடப்போவதாக எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது

டொனால்ட்ரம்ப் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தடை குறித்த அறிவிப்பை வெளியிட்டாலும் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் வெள்ளை மாளிகை நிர்வாகம் குழம்பியுள்ளது.

ரம்பின் இந்தஅறிவிப்பு மனிதஉரிமைக்குழுக்கள் மத்தியிலும் பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000dea11-800

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும இடையில் தற்போது நடைமுறையில் உள்ள சுதந்திரபெயர்வுகள்( விசா தேவையற்ற பயணங்கள்) 2019 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ளது.  இதனை பிரித்தானிய குடியேற்ற அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் தொழிலாளர்கள் பதிவுசெய்யப்படுவார்கள்.

பிரெக்சிற்க்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில நிரந்தரமான ஒரு குடியேற்றக்கொள்கை வகுக்கப்படும்வரை இந்த பதிவு நடவடிக்கை தொடரும் என பிரித்தானியத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

_96973644_libyaboatafp

லிபியாவிலிருந்து மத்தியதரைக்கடல் ஊடாக குடியேறிகள் அபாயகரமான பயணங்கள் செய்வதை தடுக்க பிரான்ஸ் புதிய முறையொன்றை திட்டமிட்டுள்ளது.

இதன அடிப்படையில் லிபியாவில் வைத்தே தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில்; சிறப்புமையங்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்படுகின்றன.

லிபியாவிலிருந்து மத்தியதரைக்கடல் ஊடாக சட்டவிரேதமாக பயணிப்பதற்கு சுமார் பத்துலட்சம் குடியேறிகள் காத்திருப்பதாக தரவுகள் வெளியான நிலையில் பிரான்சின் இந்தத்திட்டம் வெளிப்பட்டுள்ளது.

குடியேறிகள் பிளாஸ்ரிக படகுகளில் அதிகளவில் பயணித்து வருவதால்  லிபியாவுக்குரிய பிளாஸ்ரிக்படகு விற்பனையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

_96521234_gettyimages-618587404

அமேசன் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் மைக்ரோ சொப்ற் நிறுவனர் பில்ஸ் கேற்றை முந்தி உலகின் முன்னணி செல்வந்தராக உருவாகியுள்ளார்.

அவரது செல்வத்தின் மதிப்பு சுமார் 90.7 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது..

53 வயதான ஜெப் பெசோஸ்  அமேசன் நிறுவனத்தில் 17 வீத பங்குகளை கொண்டிருப்பதும் அதன் பெறுமதி 500 பில்லியன் டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

downloadjpg

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபம் இந்திய பிரதமர் மோடியினால் திறந்தவைக்கப்பட்டது.

இந்தநிலையில் பின்னர் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.க்கு கலாநிதி; அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டுமௌ திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அப்துல் கலாம் மணிமண்டபத்தை இந்தியாவுக்கு அர்ப்பணித்த மோடி  ராமேசுவரம் – அயோத்தி விரைவு தொடருந்து சேவையையும் தொடங்கி வைத்தார். அத்துடன்

புனித தலமான ராமேசுவரத்துக்கு வருகை தந்ததை தன்னுடைய பாக்கியமாகக் கருதுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg